தமிழ்நாடு

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்: முன்னாள் அமைச்சர் காமராஜ்

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்: முன்னாள் அமைச்சர் காமராஜ்

Veeramani

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் அமைச்சர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது, அந்த கன மழையில் தியாகராஜர் கோவில் சொந்தமான கமலாலயம் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் வந்து ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் கூடுதல் மழையை பெறக்கூடிய ஒரு மாவட்டமாக இருக்கிறது, இந்த பருவ மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

மேலும், விவசாய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற உரம் பூச்சி மருந்து உள்ளிட்டவைகளை தேவையான அளவு கையிருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களை மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.