தமிழ்நாடு

வயல்வெளி சகதியில் சடலத்தை சுமக்கும் கிராம மக்கள்

வயல்வெளி சகதியில் சடலத்தை சுமக்கும் கிராம மக்கள்

rajakannan

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேறும் சகதியுமாக உள்ள வயல்வெளியில் இறந்தவர்களின் சடலத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை நிலவி வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம்  அடையபுலம் கிராமத்தில் ஆதிதிராவிட வகுப்பினர் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சரியான சுடுகாட்டு பாதை இல்லாத காரணத்தினால் சேரும் சகதியுமான நிலங்களின் வழியாக தலைச்சுமையாக சடலங்களை தூக்கி செல்லும் அவல நிலை இன்றளவும் நிலவி வருகிறது.

அப்படி தூக்கி செல்லும் போது நிலை தடுமாறி சடலங்கள் கீழே விழும் சம்பவங்களும் நடைபெறுவதும் உண்டு. 
தங்களுக்கு நிலையான சுடுகாட்டு பாதை வேண்டும் என்று பல முறை பல அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தும் பிரச்னை தீர்ந்தபாடில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மயான பாதை கேட்டு கிராம மக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர். இதற்கும் அரசு செவிசாய்க்காவிட்டால் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் செய்யப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.