இளைஞர் ராஜ்குமார் - அவரது வீடு புதிய தலைமுறை
தமிழ்நாடு

வீட்டை இடிக்க முயன்ற அதிகாரிகள்... இளைஞர் விபரீத முடிவு; அதிகாரிகள் மீது பாய்ந்த நடவடிக்கை!

கும்மிடிப்பூண்டியில் அதிகாரிகள் வீட்டை இடிக்க சென்றபோது இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது வீடு அரசு நிலத்தில் இருப்பதாக கூறி, அதனை இடித்து அகற்றுவதற்காக அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த ராஜ்குமார், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

ராஜ்குமார் வீடு

அப்போது 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக தீக்காயமடைந்த அவருக்கு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகியோரை பணியிட மாற்றம் செய்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.