தமிழ்நாடு

2 கோடி மரகத முருகன் சிலை திருட்டு - யார் அந்த 7 பேர் ?

2 கோடி மரகத முருகன் சிலை திருட்டு - யார் அந்த 7 பேர் ?

webteam

திருவள்ளூர் அருகே சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான முருகன் சிலை திருடுபோயிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகேயுள்ள அலமாதி பகுதியில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவக்குமாருக்குச் சொந்தமான முருகன் கோயில் உள்‌ளது. இந்தக் கோயிலை 40 ஆண்டுகளாக சிவக்குமாரே பராமரித்து வருவதாகக் கூறப்படுகிறது. பூமிக்கடியில் கிடைத்த மரகதச் சிலையை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டு வந்ததாகவும், அதன் பின்னரே இந்தக் கோயிலை விரிவுபடுத்தி பெரியதாகக் கட்டியதாகவும் சிவக்குமார் கூறுகிறார்.

இன்று காலை ஆற‌ரை மணியளவில் கோயிலுக்கு சென்றபோது, முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மரகத முருகன் சிலையும், வெள்ளி வேலும் காணாமல் போயிருந்ததாக சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை 7 பேர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்ற பிறகே காணாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.