தமிழ்நாடு

திருவள்ளூரில் காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து வருகிறது: ஆட்சியர் சுந்தரவல்லி

திருவள்ளூரில் காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து வருகிறது: ஆட்சியர் சுந்தரவல்லி

webteam


திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் படிப்படியாகக் குறைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 

பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி இன்று ஆய்வு மேற்கொண்டார். வீடுகள், தனியார் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர், கொசு உற்பத்தியாகக் காரணமாக பழைய டயர்களை தேக்கி வைத்ததற்காக தனியார் பள்ளி நிறுவனம் ஒன்றிற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். பின்னர் பேசிய ஆட்சியர், தற்போது சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 314 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாகவும் கூறினார்.