இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு pt desk
தமிழ்நாடு

திருத்துறைப்பூண்டி | காதல் திருமணம் செய்த மூன்றே மாதத்தில் இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு!

திருத்துறைப்பூண்டியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: மாதவன்

திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் உதய பிரகாஷ் என்பவர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ஹேமா என்பவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ஹேமா குடும்பத்தினர் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு

இந்நிலையில், உதய பிரகாஷ் - ஹேமா ஆகிய இருவரும் உதய பிரகாஷின் சித்தி ராஜேஸ்வரி என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் இன்று காலை ஹேமா வீட்டு ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்ட உதய பிரகாஷ், வீட்டின் எதிரே உள்ள மரத்தில் தூக்கிட்டு இறந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த திருத்துறைபூண்டி காவல் நிலைய போலீசார், இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.