தமிழ்நாடு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி : 3 பேர் கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி : 3 பேர் கைது

webteam

திருத்தணி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றவாளிகள் 3 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ருக்மாங்கதன். இவர் தனது சகோதரர் தாமோதரனுடன் சேர்ந்து, அகூர் நத்தம், கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீண்ட நாட்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒராண்டாக ஒரு லட்ச ரூபாய் ஏலச்சீட்டு போட்டு, அதில் உறுப்பினராக உள்ள 162 பேருக்கும் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதற்கு உடந்தையாக திருமுல்லைவாயலைச் சேர்ந்த வெங்கட்ராஜூ என்பவர் இருந்துள்ளார்.

சீட்டு பணத்தை தராததால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்டவர்கள், கடந்த வாரம் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களை சிறைபிடித்தனர். ஒரு வாரத்தில் சொத்தை விற்று பணத்தை கொடுத்துவிடுவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து மோசடி செய்தவர்களை விடுவித்துள்ளனர். இந்நிலையில் வாக்குறுதி கொடுத்தபடி பணத்தை தராததால், மீண்டும் திருவள்ளூர் மாவ்டட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் உறவினர் வீட்டில் மறைந்திருந்த ருக்மாங்கதன், தாமோதரன் மற்றும் வெங்கட்ராஜூ ஆகிய 3 பேரையும் திருத்தணி காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள், பின்னர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.