திருப்பூர் வனப்பகுதியில் பயிரிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை பூனைக்குளம், கொக்குமலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான கஞ்சா செடிகள் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளன. இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் சிலர், கஞ்சா செடிகள் வளர்ப்பு குறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். தகவலை அடுத்து அதிரடியாக சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், பயிரிடப்பட்டுள்ளது கஞ்சா செடி தான் என்பதை ஆய்விற்குப் பிறகு உறுதி செய்தனர்.
இதையடுத்து பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளுக்கு வனத்துறையினர் தீ வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையினர், கஞ்சா செடி நட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு எந்த பகுதியிலாவது கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.