தமிழ்நாடு

'அருந்ததியர்களை வந்தேறி என சொல்வது இனவாதத்தின் உச்சம்' - திருமாவளவன்

'அருந்ததியர்களை வந்தேறி என சொல்வது இனவாதத்தின் உச்சம்' - திருமாவளவன்

webteam

விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உயிர்பெற வாய்ப்பில்லை என்கிறார் தொல்.திருமாவளவன்.

புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது  ''ஆரிய வந்தேறிகள் என பேசிய மண்ணில் அருந்ததிய வந்தேறிகள் என சீமான் பேசியிருப்பது வேதனைகுரியது. மனிதகுல வாழ்க்கையில் மனிதன் புலம்பெயர்ந்து கொண்டே இருப்பான். அவர்களுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. படையெடுப்பது என்பது வேறு; புலம்பெயர்வது என்பது வேறு. மார்வாடிகள், ஆரியர்களை நாம் வந்தேறிகள் என அதிகமாக சொல்வதில்லை. புலம்பெயர்ந்து வந்தவர்களில் அருந்ததியர்கள் மட்டும்தான் தூய்மைப் பணிகள் செய்பவர்களா? அப்படி குறிப்பிடுவது இனவாதத்தின் உச்சம். 

விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உயிர் பெறுமா என்று கேட்டால் அப்படி நடப்பது அரிது. உலகமயமாக்கலுக்கு பிறகு வல்லரசு நாடுகளுக்கு தெரியாமல் ஒரு புதிய நாடு உருவாகாது'' என்றார்.