திருமாவளவன் ட்விட்டர்
தமிழ்நாடு

“I.N.D.I.A கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை” - திருமாவளவன்

webteam

திருச்சியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் மாநாட்டிற்கு வருகை தந்த திருமாவளவனை அக்கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்...

india alliance

“நடைபெற உள்ள மாநாட்டின் மேடை புதிய நாடாளுமன்ற கட்டடம் போலவும், வரவேற்பு வளைவு பழைய நாடாளுமன்ற கட்டடம் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டடம், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அமர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க விவாதித்த இடம். ஆகவே அந்த கட்டடத்தை நாம் மறந்து விட முடியாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்துள்ளது. மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுவார்கள், சமூக நீதியை அழித்து எறிந்து விடுவார்கள். தேர்தல் முறையே இல்லாமல் போய் விடும், தேர்தல் பழங்கனவாகிவிடும். ஆகவே, ஜனநாயகத்தை காப்பாற்ற அரசியலமைப்பை காப்பாற்ற சட்டத்தின் விளிம்புகளை காப்பாற்ற இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.

pm modi

I.N.D.I.A கூட்டணியில் இருந்து யாரும் வெளியே போய்விடவில்லை. கூட்டணிக்குள்தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு இடம் இருக்கிறது. இதேபோல் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் மட்டும்தான் தனித்து போட்டியிட உள்ளது. I.N.D.I.A கூட்டணியில் சின்னச் சின்ன முரண்பாடுகள் உள்ளன. ஆனால், கூட்டணி உறுதியாக இருக்கும்.

தேர்தலுக்குப் பின்னர் இந்த கூட்டணி எவ்வளவு வலிமை மிக்கதாக உள்ளது என்பதை நீங்களும் உணர முடியும். காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததன் அடிப்படையில்தான் இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. இல்லையென்றால் கூட்டணி உருவாகி இருக்காது. நாங்கள் தேசிய கட்சி என இருந்திருந்தால் இந்த கூட்டணி உருவாகி இருக்காது. காங்கிரஸை பொறுத்தவரை விட்டுக் கொடுத்து அரவணைத்து செல்கிறது” என தெரிவித்தார். தொடர்ந்து சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது என் சொந்த தொகுதி என்றார்.