இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி பெற்றிருப்பது ஆதரவு அலையால் பெற்ற வெற்றி அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். வெற்றிக்காக அவர்கள் கையாளும் தந்திரங்கள் பற்றி தேர்தல் ஆணையமே பலமுறை குறிப்பிட்டு கவலை தெரிவித்திருப்பதாகவும், வழக்கமாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி கையாளும் அனைத்து வகை வரம்பு மீறல் தந்திரமே இப்போதும் வெற்றி பெற்றிருப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆளுங்கட்சிகளான அதிமுக - பாஜக பெற்றுள்ள வெற்றி, மக்கள் ஆதரவு அலையால் கிட்டியது என்று பொருள் அல்ல என்றும், இந்த வெற்றி வரும் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலேயே தங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதென ஆளுங்கட்சியினர் நம்பினால், உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோருவது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.