திருமலை முகநூல்
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு திடீர் நெஞ்சுவலி! நடந்தது என்ன?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்டராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB, ஜெனிட்டா ரோஸ்லின்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்டராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை அயனாவரத்தில் அவரது வீட்டின் முன்பாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஒரு மாநில கட்சியின் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் பலரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், நாள்தோறும் பல திடீர் திருப்பங்களை இவ்வழக்கானது கொடுத்து வருகிறது.

இந்தவகையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திருமலை என்பவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,இவரை மீட்ட பூந்தமல்லி போலீசார் உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.