தமிழ்நாடு

'கொங்கு நாடு' சர்ச்சை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

'கொங்கு நாடு' சர்ச்சை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

kaleelrahman

கொங்கு நாடு என்ற பெயரில் தமிழ்நாட்டை பிளவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி வரும் செய்திகள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் மக்களிடம் வெறுப்பு மற்றும் பகை அரசியலை வளர்ப்பதற்கு கொங்கு நாடு என்ற விஷ விதையை தூவ மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு மாவட்டங்களை குறி வைத்து பிளவுவாத அரசியல் கருத்துகளை பாஜக பரப்புகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் இது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோல், கொங்கு நாட்டை தனியாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து பகிர்ந்து வருவது ஆபத்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.