தமிழ்நாடு

அடுக்குமொழி வசனம்பேசி போலீசாரையே அதிரவைத்த திருடனின் வாக்குமூலம்: வைரல் வீடியோ

அடுக்குமொழி வசனம்பேசி போலீசாரையே அதிரவைத்த திருடனின் வாக்குமூலம்: வைரல் வீடியோ

Sinekadhara

தேனியில் காவலர்களை சிரிக்க வைக்கும் விதமாக ஆங்கிலம், தமிழ் என மாறி மாறி கோர்வையாக பேசி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய திருடனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகமான முறையில் நுழைந்த நபரை கண்டு அங்கு இருந்தவர்கள்  பிடித்து விசாரணை செய்தபோது அவர் பெயர் ராதாகிருஷ்ணன் என்றும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இதனையடுத்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கவிதை நடையில் திருட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அவர், உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரையிலும் இழுத்து பேசியிருப்பது அனைவருக்கும் சிரிப்பலையை வரவழைக்கும் விதமாக உள்ளது. “அழகிய வீடுகள் முன்பு இருசக்கர வாகனத்தில் சாவி இருந்தால் அதனை எடுத்துச்சென்று பெட்ரோல் இருக்கும் வரை அந்த வாகனத்தை ஓட்டுவிட்டு, பெட்ரோல் தீர்ந்தவுடன் அதனை ஆங்காங்கே நிறுத்தி சென்றுவிடுவதாகவும், இதுபோல் தான் பலமுறை செய்துள்ளதாகவும் ஆங்கிலம் தமிழ் என கலந்துகட்டி அவர் கோர்வையாக பேசியிருப்பது வாக்குமூலம் வாங்கிய போலீசையே சிரிக்கவைத்திருக்கிறது.

இவரின் வாக்குமூலத்தை பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் மதன கலா தனது செல்போன் மூலமாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என அவரை எச்சரித்தும் அனுப்பி வைத்துள்ளார். மேலும் பைக்கை ராதாகிருஷ்ணன் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அடுக்குமொழி வசனம்பேசி போலீசாரையே அதிரவைத்த திருடனின் வாக்குமூலம் .. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ<a href="https://twitter.com/hashtag/Police?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Police</a> <a href="https://t.co/7uJBP12fLA">pic.twitter.com/7uJBP12fLA</a></p>&mdash; PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) <a href="https://twitter.com/PTTVOnlineNews/status/1496751960581865475?ref_src=twsrc%5Etfw">February 24, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>