வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு ஐந்தாவது நாளாக 85 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கொள்ளிடம் கூட்டு குடிநீரை குடித்ததால் வாந்தி வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என 85 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 64 பேரும், அருகில் உள்ள பல்நோக்கு சேவை மையத்தில் 21 நோயாளிகளும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 15 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
(File Photo)
இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் பரவலாக வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதால் அனைவரும் குடிநீரை காய்ச்சி வடிகட்டிய பருக வேண்டும் என்றும் குளோரின் கலந்த நீரை பருக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.