தமிழ்நாடு

போலி பயனாளிகளை உருவாக்கி ஊழல் செய்யதான் இந்த மக்கள் ஐடி! நாராயணன் திருப்பதி

போலி பயனாளிகளை உருவாக்கி ஊழல் செய்யதான் இந்த மக்கள் ஐடி! நாராயணன் திருப்பதி

webteam

போலி பயனாளிகளை உருவாக்கி ஊழல் செய்வதற்காகவே மக்கள் ஐடி உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வைத்திகவுண்டம்புதூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணன் திருப்பதி, ஆதார் அட்டை ஆவணங்களோடு இணைத்து வங்கி கணக்கில் தொகை செலுத்துவதன் மூலம் ரூபாய் 2.50 லட்சம் கோடி ஊழல் நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழல் செய்ய முடியாத காரணத்தால் தான், தற்போது மக்கள் ஐடி செயலி தொடங்கி, போலி பயனாளிகளை உருவாக்கி பணத்தை கொள்ளையடிக்க திமுக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

திரையில் ஒன்று பேசுவதும், மறைவில் ஒன்று பேசுவதும் திமுகவின் வாடிக்கை. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ளே வந்த தொழிற்சாலைகளைவிட வெளியேறிய தொழிற்சாலைகளே அதிகம். கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ஈவெரா, தமிழ் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருந்தால், அப்போதே கேள்வி எழுந்திருக்கும். திராவிடம் என்று பேசுபவர்கள் பெரும்பாலோனோர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். தமிழகம் என்ற பெயர் விவகாரத்தில் ஆளுநரின் கருத்தை பாஜக வரவேற்கிறது.

மேலும் சேலம் உருக்காலை விவகாரத்தில் நாட்டு நலனுக்கு என்ன தேவையோ அதை தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மத்திய அரசு செய்யும் என்று தெரிவித்த அவர், திமுகவை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் திரைத்துறையை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்துக்கொண்டு, திரைத்துறையினரை மிரட்டி வருவதாக குற்றம்சாட்டினார்.