தமிழ்நாடு

அனல்மின் நிலைய விரிவாக்கம்: மீன்வளம் பாதிக்கப்படுவதாக எண்ணூர் மீனவர்கள் போராட்டம்

அனல்மின் நிலைய விரிவாக்கம்: மீன்வளம் பாதிக்கப்படுவதாக எண்ணூர் மீனவர்கள் போராட்டம்

kaleelrahman

கொசஸ்தலை ஆற்றில் மின்வாரிய கட்டுமான பணிகளால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகக்கூறி குழந்தைகள், பெண்கள் என எண்ணூர் மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட படகுகளில், நீர்வழித் தட போராட்டம் நடத்தினர். கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொசஸ்தலை ஆறு எண்ணூர் கழிமுக பகுதியில் கலக்கும் இடத்தில், ஊரணம்பேடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் வடசென்னை அனல்மின் நிலைய 4-வது விரிவாக்க பணிகளுக்காக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி எடுத்து செல்லும் கண்வேயர் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

இதனால், கொசஸ்தலை ஆறு மூடப்படும் அபாயம் இருப்பதாகவும், அலையாத்தி காடுகள் அழிந்து மீன்வளம் பாதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி எண்ணூர் மீனவர்கள், 300-க்கும் பேற்பட்டோர், 70-க்கும் மேற்பட்ட படகுகளில் காட்டுக்குப்பம் பகுதியில் இருந்து நீர்வழித் தட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 8 கி.மீ. தூரம் வரை நீர் வழித் தடத்தில் வந்த மீனவர்கள், மின்வாரியத்தால் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.