தமிழ்நாடு

சடலத்தை வயல்வெளியில் தூக்கிச்செல்லும் அவலம் - சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத்தர கோரிக்கை

kaleelrahman

கமுதி அருகே 30 ஆண்டுகளாக சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாததால் வயல்வெளியில் இறங்கி சடலத்தை தூக்கிச் செல்கின்றனர் கிராம மக்கள். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வல்லக்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தங்களது கிராமத்தில் யாரேனும் உயிரிழந்துவிட்டால் அவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு கொண்டுசெல்ல பாதை வசதி இல்லாமல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உயிரிழந்த ஒருவரின் உடலை சேறும் சகதியுமான வயல்வெளியில் இறங்கி மிகுந்த சிரமத்தோடு கொண்டுசென்று தகனம் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சுடுகாட்டுக்கு சடலங்களை கொண்டுசெல்ல பாதை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.