தமிழ்நாடு

சசிகலா சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது - அமைச்சர் ஓஎஸ்.மணியன்

சசிகலா சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது - அமைச்சர் ஓஎஸ்.மணியன்

kaleelrahman

சசிகலா சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டியளித்தார்.

நாகையை அடுத்துள்ள நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் யாத்ரீகர்கள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமையவுள்ள கட்டடத்திற்கு தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் பேசும்போது.

"அதிமுகவில் அசல் வித்தாக இருக்கிற தொண்டர்கள் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி எந்த செயலையும் செய்யமாட்டார்கள். சசிகலா வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றவர்கள் அதிமுக தொண்டர்கள் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், கூட்டுறவு தேர்தல்களை சந்தித்த அமமுகவின் பலம் என்ன என்பது நாட்டுக்கே தெரியும்" என்றவரிடம்,

சசிகலா சொத்துகள் முடக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சசிகலா சொத்துகள் முடக்கபடுவது மத்திய அரசின் நடவடிக்கை. நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்பட்டது. ஆணைகள் பிறப்பிக்கபட்டதால் அதிகாரிகள் பணிகளை செய்கின்றனர். சசிகலா சொத்துகள் முடக்குவதில் அரசியல் கிடையாது என்று கூறினார்.