பிரெஞ்சு பெண்ணை காதல் திருமணம் செய்த தேனி இளைஞர் pt desk
தமிழ்நாடு

பிரான்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கரம் பிடித்த தேனி இளைஞர்!

மேல் படிப்பிற்காக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற தேனி இளைஞர் அந்நாட்டுப் பெண்ணை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் தேனியில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

தேனி அருகே முத்துதேவன்பட்டியைச் சேர்ந்தவர்கள் போஜன் - காளியம்மாள் தம்பதியினர். இவர்களின் மகன் கலைராஜன். அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றிவந்த போஜன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் கலைராஜன் கடந்த 2017 ஆம் ஆண்டு மேல் படிப்பிற்காக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று தனது படிப்பை தொடர்ந்தார்.

பிரெஞ்சு பெண்ணை காதல் திருமணம் செய்த தேனி இளைஞர்

அங்கு கலைராஜனுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியம் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி பிரான்ஸ் பெண் மரியாவிற்கு தாலி கட்டி நேற்று திருமணம் செய்து கொண்டார் கலைராஜன்.

இவர்களது திருமண நிகழ்வில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இது குறித்து மணப்பெண் மரியம் கூறிய போது... “பாரிசில் படிக்க சென்ற போது, கலைராஜனை சந்தித்தேன். அப்போது அவர் மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டோம். தமிழர் முறைப்படி திருமணம் செய்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது” எனத் தெரிவித்தார்.