கழிவுநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் pt desk
தமிழ்நாடு

தேனி: குழந்தைகளோடு கழிவுநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் - காரணம் என்ன?

PT WEB

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அரப்படிதேவன்பட்டி வடக்குதெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், அடிக்கடி தெருக்களில் கழிவுநீர் தேங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அப்பகுதி பெண்கள், “கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தார்ச்சாலை அமைக்ககூடாது” எனக்கூறி, சாலை பணியை தடுத்து நிறுத்தினர்.

அதிகாரிகள் உறுதி

தொடர்ந்து குழந்தைகளோடு, தேங்கியிருந்த கழிவு நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கிராம ஊராட்சி ஆணையாளர் உள்ளிட்டோருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.