தமிழ்நாடு

தேனி காட்டுத்தீ சம்பவம்: டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் காவல்துறை ஆய்வு

தேனி காட்டுத்தீ சம்பவம்: டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் காவல்துறை ஆய்வு

webteam

சென்னை பாலவாக்கத்தில் டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரின் வீட்டில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ட்ரெக்கிங் சென்ற சென்னை மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த 39 நபர்களில் இதுவரை 11 பேர் தீயில் கருகி உயிரிந்துள்ளனர். இதை தொடர்ந்து ட்ரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரை போலீசார் தேடி வரும் நிலையில். தேனி மாவட்டம் சின்னமன்னூர் காவல் ஆய்வாளர் இம்மானுவேல் ராஜ்குமார், குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் தெய்வகண்ணன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் சென்னை பாலவாக்கத்தில் இயங்கி வந்த ட்ரெக்கிங் கிளப் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து சோதனையில் ஈடுபட்டனர். 

பின்னர் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு வந்த தனிப்படை போலீசார் ட்ரெக்கிங் கிளப் குறித்தும் அதன் உரிமையாளர் பீட்டர் குறித்தும் தகவல்களை சேகரித்தனர். மேலும் ட்ரெக்கிங் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.