கைது செய்யப்பட்ட நபர்கள்  pt wep
தமிழ்நாடு

தனியார் நிறுவன ஊழியர் மீது மிளகாய்ப் பொடி தூவி 2 லட்சம் கொள்ளை; உடன் வந்த சக ஊழியரே உதவியது அம்பலம்!

கம்பத்தில் தனியார் நிறுவன ஊழியர் மீது மிளகாய்ப் பொடி தூவி, இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கரூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நாள்தோறும் பணம் வசூல் செய்து வருவது வழக்கம். பரமசிவம் வசூல் செய்த 2 லட்சம் ரொக்க பணத்துடன், தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியரான கண்ணன் (20), என்பவரை இருக்க சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு நாராயணத்தேவன்பட்டி, அருகே உள்ள செல்லாண்டியம்மன் பகுதியில் வந்துள்ளார். அப்போது அந்த சாலையில் நின்றிருந்த இரண்டு பேர் கண்ணன் மற்றும் பரமசிவத்தின் மீது மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளனர். இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடம்

இதனையடுத்து, அந்த மர்மநபர்கள் அவர்களிடம் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, பரமசிவம் ராயப்பன்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போல்சிர் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பணம் பறிப்பு சம்பவத்திற்குக் கண்ணனே உடந்தையாக இருந்ததும், பணம் கொண்டு வருவது தொடர்பாக அனைத்தையும் திட்டமிட்டு தனது நண்பர்களிடம் கூறி பணம் பறிக்க யோசனை கூறியது என அனைத்தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராயப்பன்பட்டி காவல்நிலையம்

இது தொடர்பாக கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த, நண்பர்கள் பாஸ்கர் (29),அபிஷேக் (22), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் மீட்டனர்.