கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தேனி மாவட்ட போக்குவரத்து காவலர்களுக்கு, கோடை காலம் முடியும் வரை தினமும் பழச்சாறு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ள நிலையில், வெயிலையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு ஏற்படும் உடல் சோர்வை தணிக்க, மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு நாள்தோறும் பழச்சாறு, நீர்,மோர் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நேரு சிலை சந்திப்பில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே பழச்சாறு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
கோடைகாலம முடியும் வரை (மே மாத இறுதி வரை) தேனி மாவட்டம் முழுவதும் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு நாள்தோறும் பழச்சாறு, நீர்,மோர் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி., பிரவீன் உமேஷ் டோங்ரே தெரிவித்தார்.