தமிழ்நாடு

தேனி: கஞ்சா வியாபாரிகளின் ரூ.58 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

தேனி: கஞ்சா வியாபாரிகளின் ரூ.58 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

webteam

தேனியில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.58 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பெரியகுளம் கைலாசபட்டியைச் சேர்ந்த கங்காதேவா (26) பிரபாகரன் (22) ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைலாசபட்டியில் கங்காதேவாவின் பெயரில் உள்ள வீடு, கார், இருசக்கர வாகனம் மற்றும் அவரது சகோதரி பெயரில் இருக்கும் நிலம் என 53,82,787 ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

மற்றொரு குற்றவாளியான பிரபாகரனின் பெயரில் கைலாசபட்டியில் உள்ள 4,52,085 ரூபாய் மதிப்பிலான வீடு, என மொத்தம் ரூ. 58,34,872 மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.