தமிழ்நாடு

தேனி: நெடுஞ்சாலை நடுவே ராட்சத குழாய் உடைந்து கடல் அலைபோல பீய்ச்சி அடித்த தண்ணீர்

தேனி: நெடுஞ்சாலை நடுவே ராட்சத குழாய் உடைந்து கடல் அலைபோல பீய்ச்சி அடித்த தண்ணீர்

kaleelrahman

தேனி மாவட்டம் கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத குழாய் உடைந்து 10 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பொங்கி பீய்ச்சி அடித்தது.

கம்பம் சிக்னல் அருகே குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராட்சத குடிநீர் குழாய் உடைந்தது. இதையடுத்து ராட்சத குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென குழாய் மேலும் உடைந்ததால் 10 அடிக்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.


ஹாலிவுட் திரைப்படக்காட்சி போல திடீரென தண்ணீர் பீறிட்டதால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும், மக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலையில் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.