OPS pt desk
தமிழ்நாடு

‘தம்பி துபாயா...’ ஓபிஎஸ் பரப்புரையில் டிப்-டாப் ஆக வந்து முழக்கமிட்ட இளைஞரால் பரபரப்பு!

ராமநாதபுரம் அருகே ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில் டிப் டாப் ஆக வந்த நபர், “நான் துபாயிலிருந்து வருகிறேன். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் வைக்க வேண்டும்” என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய பகுதிகளான குயவன்குடி, வாலாந்தரவை, வழுதார், பெருங்குளம் செம்படையார்குளம் கும்பரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலாப்பபழ சின்னத்திற்கு வாக்குககள் கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஓபிஎஸ் பரப்புரையில் டிப்-டாப் ஆக வந்து முழக்கமிட்ட இளைஞரால் பரபரப்பு!

அப்படி செம்படையார்குளம் கிராமத்தில் ஓ.பன்னீர் செல்வம் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கோட் சூட் அணிந்தபடி டிப் டாப்பாக வந்து, “நான் துபாயிலிருந்து வருகிறேன். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்” என ஓ.பன்னீர் செல்வத்தை பார்த்து முழக்கமிட்டார்.

அப்போது ஓபிஎஸ், “தம்பி துபாயா... முதல்ல அந்த கூலிங் கிளாஸை போடுங்க” என அவருடம் சிரித்து கொண்டே பேசினார். ஆனால், அந்த இளைஞர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.