தமிழ்நாடு

அமைச்சரின் காலில் விழுந்து வேலை கேட்ட பெண்: நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்

அமைச்சரின் காலில் விழுந்து வேலை கேட்ட பெண்: நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்

kaleelrahman

மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அமைச்சரின் காலில் விழுந்து வேலை கேட்ட பெண்ணிடம், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

பூந்தமல்லியை அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவ முகாமை ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடல்களை பரிசோதனை செய்து கொண்டனர். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்து தனக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தான் ஆதரவற்று இருக்கிறேன்.

அதனால் தனக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டுமென்றும், அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து உள்ளதாகவும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கண்ணீர் மல்க பெண் ஒருவர் அமைச்சரின் காலில் விழுந்து வேலை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.