கடலூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேற்று முதலே கடலூரில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், புயல், மழை உள்ளிட்டவை இருந்தால்தான் கடலில் மாற்றம் ஏற்பட்டு மீன் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடலூரில் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால் சாலையில் நீர் பெருகெடுத்து ஓடுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று அதிகாலை முதல் திருவாரூர், புலிவலம், நன்னிலம், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் வடகிழக்கு பருவமழையை அரசாங்கம் உரிய முறையில் சேமித்தால் கோடைக்காலங்களில் தங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.