தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணைக்கான நீர்வரத்து முற்றிலும் நின்றது

webteam

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை முற்றிலும் ஓய்ந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. 

முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதமாக மழை முற்றிலும் ஓய்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் ஒகி புயலின்போது பெய்த மழைக்குப்பின் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் விநாடிக்கு கடந்த சில வாரங்களாக 100 கன அடியை தாண்டாத நிலை ஏற்பட்டது. தற்போது மழை தொடர்ந்து குறைந்து, வறட்சி சூழல் நிலவுவதால் அணைக்கான நீர்வரத்து முற்றிலும் நின்று போனது. 
தமிழக குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. நீர்வரத்து நின்றதாலும், நீர் திறப்பு கணிசமாக இருப்பதாலும் அணை நீர்மட்டம் தினமும் சிறுசிறு புள்ளிகளாக குறைந்து தற்போது 117 அடியாகியுள்ளது. அணையில் நீர் இருப்பு 2 ஆயிரத்து 141 மில்லியன் கன அடியாக உள்ளது.