குழந்தை புதியதலைமுறை
தமிழ்நாடு

சென்னையில் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் விபரீத முடிவு - காரணம் என்ன?

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து தவறி விழுந்து காப்பாற்றப்பட்ட குழந்தையின் தாய் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

PT WEB

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து தவறி விழுந்து காப்பாற்றப்பட்ட குழந்தையின் தாய் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை திருமுல்லை வாயிலில் வசித்து வந்த வெங்கடேஷ் ரம்யா தம்பதியின் 7 மாத கைக்குழந்தை சில வாரங்களுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து தவறி விழுந்தபோது அக்கம்பக்கத்தினரால் காப்பாற்றப்பட்டது. இதனால் பலரும் ரம்யா மீது கடுமையான விமர்ச்சனம் செய்து வந்த நிலையில், அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேஷ் அவரை கோவையில் இருக்கும் அவரது சொந்த ஊருக்கு அழைத்து வந்த நிலையில், அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.