கும்பகோணம் Facebook
தமிழ்நாடு

கும்பகோணம்|சாதி ரீதியாக பேசியதாக பேராசிரியர் மீது குற்றச்சாட்டு! மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம்!

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களை சாதி ரீதியாக பேசியதாக குற்றச்சாட்டிற்கு ஆளான தமிழ்த்துறை பேராசிரியர், வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களை சாதி ரீதியாக பேசியதாக குற்றச்சாட்டிற்கு ஆளான தமிழ்த்துறை பேராசிரியர், வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ, மாணவர்களை சாதிரீதியாக பேசுவதாகக் கூறி, மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

6 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்றதையடுத்து, கல்லூரி காலவரையன்றி மூடப்படுவதாக கல்லூரி முதல்வர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், ஏற்கெனவே போராட்டத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பேராசிரியை மீது நடவடிக்கை எடுத்து, கல்லூரியை திறக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாம் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு கேட்டபோது, பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கம்போல் கல்லூரி இயங்கும் எனவும் தெரிவித்தார்.

இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவை பெற பேராசிரியை ஜெயவாணி முன்வரவில்லை எனக் கூறிய கல்லூரி முதல்வர், உத்தரவை அவரிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கல்லூரி வழக்கம்போல் செயல்படுவதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.