தமிழ்நாடு

புதிய டாஸ்மாக் கடைகளை மக்களே தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம்

புதிய டாஸ்மாக் கடைகளை மக்களே தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம்

JustinDurai

டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.  

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கான அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு அரசு. அதன்படி, டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்க வேண்டும். மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் மதுக் கடைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது. ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டத்திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க: காவல்துறையினருக்கு பாராட்டுடன் அறிவுரையும் வழங்கிய டிஜிபி சைலேந்திர பாபு