தமிழ்நாடு

கோயில் வளாகக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை

webteam

கோயில் வளாகங்களிலுள்ள கடைகளை அகற்றக்கோரிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் கடை நடத்தி வந்தவர்களால் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அதன் தூண்கள் மற்றும் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு கடை நடத்தி வருபவர்கள் கடைகளை அகற்ற வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் கடை நடத்தி வந்தவர்களும் பதில் மனுவை தாக்கல் செய்தனர். அதில் கடைகளை காலி செய்வதற்கு கால அவகாசம் தருமாறு கோரப்பட்டிருந்தது.

இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடைகளை காலி செய்யும் கால அவகாசத்தை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. இதை எதித்து குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் உயநீதிமன்றம் விதித்த கெடு நாளை முடிவடையும் நிலையில் உச்சநீதிமன்றம் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.