நாமக்கல் மாவட்டம் விட்டம்பாளையம் அரசுப் பள்ளி விடுதி வளாகத்தில் கிரிக்கெட் விளையாட்டின்போது மட்டை நழுவிச்சென்று தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற 7ஆம் வகுப்பு மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரமத்தி அருகேயுள்ள சித்தபூண்டி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வேஸ்வரன் என்ற 7ஆம் வகுப்பு மாணவன் விட்டம்பாளையத்தில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் விடுதி வளாகத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த ஆசிரியர் குப்புசாமியும் விளையாடியுள்ளார்.
எதிர்பாராமல் ஆசிரியர் கையிலிருந்து நழுவிச்சென்ற கிரிக்கெட் மட்டை, விஸ்வேஸ்வரன் தலையை தாக்கியுள்ளது. அதில் காயமடைந்த மாணவன் முதற்கட்ட சிகிச்சைக்கு பின் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவன் கோமா நிலையை அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், விஸ்வேஸ்வரனை அவரது ஆசிரியர் குப்புசாமி வேண்டுமென்றே தாக்கியதாக மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.