தமிழ்நாடு

6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

webteam

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் ஒரு பிரிவினர் 6ஆவது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது. அரசுப்பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்றும் காலை முதல் குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தற்காலிக ஓட்டுநர்களால் கடந்த சில நாட்களாக பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.