25 மீனவர்களை கைது  முகநூல்
தமிழ்நாடு

தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இந்திய பெருங்கடலில் வைத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது என்பது தொடர் கதையாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 மீனவப் படகுகளையும் படகில் இருந்த 25 மீனவர்களையும் எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக கூறி பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது செய்த மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை துறைமுகத்திற்கு அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த 7 ஆம் தேதி இராமேஸ்வரம் , புதுக்கோட்டை மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இன்றளவும் விடுவிக்கப்படாத நிலையில் தற்போது தொடர் கைதாக இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மீனவர்களின் இந்த தொடர் கைது என்பது மீனவ மக்களிடையே கடும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.