தமிழ்நாடு

பெற்ற தாயை இரக்கமின்றி முட்புதரில் வீசிச் சென்ற மகன்! உதவிய காவல்துறை

பெற்ற தாயை இரக்கமின்றி முட்புதரில் வீசிச் சென்ற மகன்! உதவிய காவல்துறை

webteam

பெற்ற தாயை இரக்கமின்றி மகனே முட்புதரில் வீசிச் சென்ற கொடூரச் செயல் திருவள்ளூரில் நிகழ்ந்துள்ளது.

பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் உள்ள முட்புதரில் இருந்து மூதாட்டி ஒருவரின் சத்தம் கேட்டது. இதைக்கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது, 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தரையில் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து அளித்த தகவலின்பேரில் நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தான் மணலி சேக்காடு பகுதியை சேர்ந்த காந்திமதி என்றும் குடும்பத்திற்கு பாரமாக இருப்பதாகக் கருதி தமது இரண்டாவது மகன் சங்கர் என்பவர் வீட்டில் இருந்து தன்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் வந்து முட்புதரில் வீசிச் சென்றதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

பெற்ற தாயை, இரக்கமின்றி மகனே முட்புதரில் வீசி சென்ற சம்பவத்தால், மனிதநேயம் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.