தமிழ்நாடு

திருச்சி அருகே இரண்டாவது நாளே வெறிச்சோடிய டாஸ்மாக் - காரணம் என்ன?

திருச்சி அருகே இரண்டாவது நாளே வெறிச்சோடிய டாஸ்மாக் - காரணம் என்ன?

webteam

திருவெறும்பூரில் இயங்கும் டாஸ்மாக் கடை ஒன்றில் இரண்டாவது நாளே ஆட்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் 43 நாள்கள் மூடப்பட்டிருந்து. இந்நிலையில் நேற்று 3700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் டாஸ்மாக் மூலம் 170 கோடி ரூபாய் மது விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், திருவெறும்பூரில் இயங்கும் டாஸ்மாக் கடை ஒன்றில் இரண்டாவது நாளே ஆட்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

திருவெறும்பூர் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க யாருமே வரவில்லை. கூட்டமே இல்லாத சூழலில் திருவெறும்பூர் மதுபான கடை காற்றோடி காட்சியளிக்கிறது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் தினக் கூலிகள் என்பதால், மக்களிடம் பணம் இல்லாததும் மது வாங்க வராததற்கு ஒரு காரணமாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், திருச்செந்தூரிலுள்ள அரசு மதுபானக் கடைகளில் மது வாங்க யாரும் வராமல் கடைகள் வெறிச்சோடின. இரண்டாம் நாளான இன்று திருச்செந்தூரிலுள்ள மதுபானைக்கடைகளில் அடையாள அட்டைகள் இல்லை என்றால் உங்கள் ஆதார் அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று அரசு மதுபான கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், யாரும் மதுபானத்தை வாங்க முடியாத சூழ்நிலை நிலவி கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் மதுபானத்தை வாங்க முடியாமல் கடைகள் வெறிசோடிய நிலையில் காணப்படுகிறது.