மீனவ மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான கடல்பாசி திட்டம், தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை அனுப்பியவுடன் தொடங்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு அருகில் உள்ள சேமத்தம்மன் தெருவில் வீடுதேடி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். அப்போது தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தொடர்புடைய செய்தி: நல்ல லாபம் தரும் கடற்பாசி
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள கடல்பாசி திட்டம் மீனவ சகோதரிகளுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய உந்து சக்தியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.