தமிழ்நாடு

மெரினா புரட்சியின் நினைவு... சீறிப்பாயும் கருப்பன் - வீடியோ!

மெரினா புரட்சியின் நினைவு... சீறிப்பாயும் கருப்பன் - வீடியோ!

webteam

மதுரை அலங்காநல்லூரில் வசிக்கும் லோகநாதனின் மனைவி பாண்டிச் செல்விக்கு ஜல்லிக்கட்டு காளை என்றால் அத்தனை பிரியம். சிறு வயது முதலே காளைகள் வளர்ப்பில் அதீத ஈடுபாடு கொண்ட அவருக்கு, ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை துயரத்தை  ஏற்படுத்தியது.அதன்பின், 2017ஆம் ஆண்டு இளைஞர்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க மெரினா போராட்டத்தின் காரணமாக, ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது. அதை நினைவு கூறும் விதமாக அலங்காநல்லூர் மக்கள் ஒன்றுசேர்ந்து, 2 மாத கன்றுக்குட்டியை வாங்கி பாண்டிசெல்விக்கு பரிசாக வழங்கினர். அவரின் குடும்பம் அதற்கு கருப்பன் என பெயரிட்டு வளர்த்து வருகிறது.