தமிழ்நாடு

மீன் விலை ஏற்றத்தால் மீனவர்களுக்கு கொண்டாட்டம்!

மீன் விலை ஏற்றத்தால் மீனவர்களுக்கு கொண்டாட்டம்!

webteam
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில்மீன் விலை உயர்வு மீன்களை வாங்க வியாபாரிகள் பொதுமக்களிடையே போட்டி நிலவியதால் 1-கிலோ விளை மீன் 200-ரூ க்கும் 1-கிலோ அயலை மீன் 200-க்கும் சூரை மீன் 140-ரூ க்கும் இரால் 120-ரூ க்கும் விற்பனை விசைப்படகில் சிக்கிய 4-ராட்சத யானை திருக்கை மீன்கள் 75-ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 12-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குமரிக்டல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் வீசி வந்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.  இதனால்,  மீன் வரத்து குறைந்ததால் மீன் விலை அதிகரித்தே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாககாற்றின் சீற்றம் கொஞ்சம் குறைந்த்தால், மீனவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனால் மீன் வரத்து அதிகரித்திருந்ததால், மீன் விலை சற்று குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், இன்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய மீனவர்களின் விசைப்படகுகளில் அதிக அளவில் புல்லன் இரால் மற்றும் அயலை விளை மீன், ஊழி, சூரை மீன்கள் அதிக அளவில் பிடிபட்டிருந்தது.இவற்றை விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில் மீன் வரத்து அதிகரித்திருந்தாலும், மீன்களை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே  போட்டி நிலவியதால் சாதாரணமாக 1-கிலோ 100-ரூ வரை விலை போகும் சூரை மீன் 140-ரூ க்கும் 100-ரூக்கு விலை போகும் அயலை 200-ரூ க்கும் விளை மீன் 200-க்கும் 90-ரூ க்கு விலை போன புல்லன் இறால் 120-ரூ க்கும் விற்பனையானது. அதேப்போல் விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய தலா 400-கிலோ எடை கொண்ட 4- ராட்சத யானை திருக்கை மீன்கள் 75-ஆயிரம் ரூபாய்க்கும் விலை போனது.