தமிழ்நாடு

விலைவாசி உயர்விற்கு பொருட்கள் கடத்தப்படுவதும் பதுக்கப்படுவதுமே காரணம் - ஓபிஎஸ்

விலைவாசி உயர்விற்கு பொருட்கள் கடத்தப்படுவதும் பதுக்கப்படுவதுமே காரணம் - ஓபிஎஸ்

webteam

விலைவாசி உயர்வுக்கு பல்வேறு பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும், விலை வாசி உயர்வு ஏற்படுவதற்கு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதும் பதுக்கப்படுவதுமே காரணம் என்று கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமையல் எண்ணெயின் விலை 20 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெயின் விலை 42 சதவீதமும், பருப்புவகைகள் 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. இவற்றைப் போலவே அரிசி சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளன. விலைவாசி உயர்வுக்கு பல்வேறு பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும், விலை வாசி உயர்வு ஏற்படுவதற்கு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதும் பதுக்கப்படுவதுமே காரணம். ஆகையால் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.