முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது போல பிச்சாட்டூர் அணையை முன்னறிவிப்பின்றி திறந்ததால் ஆரணியாற்றில் 3 இடங்களில் கரைகள் உடைந்தன என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாசர், “கடந்த ஆட்சியில் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதால் தென் சென்னை பாதித்தது. அதேபோல் ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையில் இருந்து முன்னறிவிப்பின்றி ஆரணியாற்றில் 20000 கனஅடி நீர் திறக்கப்பட்டதால் சோமஞ்சேரி, வஞ்சிவாக்கம், பெரும்பேடுகுப்பம் ஆகிய 3 இடங்களில் கரைகள் உடைப்பு ஏற்பட்டது.
சென்னையில் 9 பாலங்கள் சீரமைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது. அடுத்த பேரிடர் வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” என்றார்.