"போக்குவரத்து சேவை புரிய முடியாவிட்டால் தனியார் மயமாக்க வேண்டியதுதானே" என்ற நீதிமன்ற கருத்து ’ஏற்புடையதல்ல’ என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, “போக்குவரத்தை இயக்க முடியாவிட்டால், அதை கலைத்துவிட்டு தனியார் மயமாக்க வேண்டியதுதானே? தற்போதுள்ள பணியாளர்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்து கழகங்களை படிப்படியாக தனியார் மயமாக்குங்கள்” என்ற கருத்தினை தெரிவித்தார்.
முன்னதாக செவிலியர்கள் போராட்டத்தின் போதும் வேலை பிடிக்காவிட்டால், வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். நீதிபதியின் இந்தக் கருத்து ஏற்புடையது அல்ல என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதுதொடர்பாக புதிய தலைமுறை இணையதளத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பு முடிவில் நீதிபதியின் கருத்துக் கணிப்பு ஏற்புடையது அல்ல என்று 59 சதவீதம் பேர் வாக்களித்தனர். அதேபோல், ஏற்புடையது என்று 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.