தமிழ்நாடு

‘குழி தோண்டிவிட்டோம் உடல் வரவில்லை’: காஷ்மீரில் இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் சோகம் 

‘குழி தோண்டிவிட்டோம் உடல் வரவில்லை’: காஷ்மீரில் இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் சோகம் 

webteam
ஜம்முவில் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரரின் உடலை விரைவில் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு அவரது சகோதரர் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் துணை ராணுவப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மரணமடைந்தார். அதன் பின்னர் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது சொந்த தோட்டத்தில் மறைந்த சந்திரசேகருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கும் உடலைப் புதைப்பதற்கும் அவரது உறவினர்கள்  பணிகளை மேற்கொண்டனர்.  
 
 
வீரரைப் புதைப்பதற்காகக் குழி தோண்டி 2 நாட்களாகக் காத்திருக்கின்றனர். நேற்றே உடல் வரும் என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாகியும் இது வரை அவரது உடல் வந்து சேரவில்லை. ஆகவே  உடனடியாக உடலைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயிரிழந்த வீரரின் தம்பி சதீஸ் பிரதமருக்கு புதிய தலைமுறை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்