தமிழ்நாடு

தனித்தேர்வராக இனி ப்ளஸ் 2 தேர்வை எழுத முடியாது

தனித்தேர்வராக இனி ப்ளஸ் 2 தேர்வை எழுத முடியாது

webteam

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள், இப்பருவம் முதல் நேரடி தனித்தேர்வராக 12ஆம் வகுப்பு தேர்வெழுத முடியாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

11ஆம் வகுப்பு தேர்வுகளும் பொதுத்தேர்வாக நடத்தப்படுவதால் 10ஆம் வகுப்பை தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக தனித்தேர்வராக 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாது.

இவர்களை தவிர்த்து, 2017ஆகஸ்ட் 9ஆம் தேதி பழைய நடைமுறை பாடத்திட்டன்படி அதாவது ஒரு பாடத்திற்கு 200 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வெழுதி தோல்வியுற்ற அல்லது ஹால் டிக்கெட் பெற்று தேர்வெழுத முடியாத நிலைக்கு ஆளான தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் வரும் திங்கள்கிழமை தொடங்கி செப்டம்பர் 1ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.