சென்னை அயப்பாக்கத்தில் வீட்டுவசதி வாரியத்தில், மொத்த பணத்தையும் செலுத்தியவர்களுக்கும் அதிகாரிகள் விற்பனை பத்திரங்களை வழங்காமல் காலதாமதம் செய்வதாகக் கூறி, வீட்டு உரிமையாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்தினால் கட்டப்பட்ட ஆனந்தம் மற்றும் மகிழ்மதி உள்ளிட்ட வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி கட்டடங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டு முழு தொகையையும் செலுத்திய பிறகும் அதிகாரிகள் விற்பனை பத்திரம் வழங்காமல் இருப்பதாக வீட்டு உரிமையாளர்கள் கூறுகின்றனார். விலை உயர்ந்துவிட்டதாகக் கூறி அதிகாரிகள் வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கூடுதலாக செலுத்தச் சொல்வதாக கூறுகின்றனர். இதை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீட்டு வசதி வாரிய நிவாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய செய்தி: நீட் விலக்கு: புனித ஜார்ஜ் கோட்டையில் நாளை கூடுகிறது சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்