வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் file
தமிழ்நாடு

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பில்லை - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பதிவான வடகிழக்கு பருவ மழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வரும் நான்கு நாட்களில் மழை நீடிக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அலுவலகத்தில் இன்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்... கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைக்கு அப்பால் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த நான்கு தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் டெல்டா மாவட்டங்கள், புதுவை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தென்தமிழக மாவட்டங்களில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது வருகிற 14-ஆம் தேதி வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது. 15 ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்புள்ளது.

heavy Rain

மீனவர்களுக்கான எச்சரிகை:

தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மன்னார் வளைகுடா குமரி கடல் தமிழக கடற்கரை பகுதிகள் தெற்கு ஆந்திர பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் அவ்வப்போது 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்த பாலச்சந்திரன், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது" என்றும் தெரிவித்தார்.