ஓடிசாவில் இருந்து விரைவு ரயில் மூலம், 27.6 டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 2 லாரிகள் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தடைந்தன.
தமிழக அரசு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் வரவழைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு விரைவு ரயில் மூலம், 5 காலி லாரிகள் அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றில் 2 லாரிகள், தலா 13.8 டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு, திருள்ளூர் ரயில் நிலையம் வந்து சேர்ந்துள்ளன. ஒரு லாரி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், மற்றொன்று விமானத்தின் வாயிலாக மதுரைக்கும் அனுப்பப்பட உள்ளன. இன்று மாலை, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, மேலும் 5 காலி லாரிகள் ரூர்கேலாவுக்கு அனுப்பப்பட உள்ளன.